/

இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி: மத்திய அரசு

இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 4:15 pm

DIN


இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"இந்தியாவில் மீண்டும் ஒருமுறை ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது."

சனிக்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 93 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 127 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.