புதிய சாதனை படைத்த தடுப்பூசி இயக்கம்: மகிழ்ச்சி தெரிவித்த மோடி
இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்திருப்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்


இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்திருப்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
கரோனா பேரிடரை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே தற்போதைய பேராயுதமாக இருக்கும் நிலையில், நாட்டில், தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான சாதனையைக் கடந்திருப்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மக்கள் தொகையில் தகுதியானவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இப்போது முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் குறித்து நல்ல செய்தி சொன்ன அமெரிக்க ஆலோசகர்
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் சுட்டுரைப் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது; இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான சாதனையைப் படைத்திருப்பது கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த இந்த வேகத்தைத் தொடர்ந்து பராமரிப்பது முக்கியமாகும்.
மேலும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொவிட்-19 தொடர்பான இதர அனைத்து விதிமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...