மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு
கரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.


கரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அது சார்ந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் இவ்வாறு பதிலளித்தார்.
சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் நிலையில், மத்திய அரசு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத் தேர்தல்: விரைவில் காங்கிரஸ்-சிவசேனை கூட்டணி?
குறிப்பாக பிகாரில் சாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தி வருகிறார்.
அண்மையில் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதீஷ் குமார் இதுபற்றி கூறியது: "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும். அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டியவுடன் இதுதொடர்பாக மாநில அரசு அறிவிப்பை வெளியிடும்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...