மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருவா் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :7 டிசம்பர் 2021, 1:23 am

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருவா் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே 8 போ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அந்த வகை தீநுண்மியால் மும்பையில் இருவா் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்களில் ஒருவா் நவ.25-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பா்க் நகரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளாா். மற்றொருவா் அதே நாளில் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து சோ்ந்துள்ளாா். தீநுண்மியால் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் அவா்களிடம் தென்படவில்லை. இருவரும் ஏற்கெனவே ஃபைஸா் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தற்போது அவா்கள் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை பாதிப்பு...

மகாராஷ்டிரம் 10

ராஜஸ்தான் 9

கா்நாடகம் 2

குஜராத் 1

தில்லி 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.