ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹெலிகாப்டர் விபத்து: நாடாளுமன்றத்தில் இன்று ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல்

முப்படைகள் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

News image
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
Updated On :9 டிசம்பர் 2021, 2:43 am

DIN

முப்படைகள் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

இந்நிலையில், விபத்து குறித்து விரிவான அறிக்கையை இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜ்நாத் சிங் தாக்கல் செய்யவுள்ளார். மக்களவையில் காலை 11.15 மணியளவில், மாநிலங்களவையில் பகல் 12 மணியளவில் உறுப்பினர்களிடையே ராஜ்நாத் சிங் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு விபத்தில் உயிரிழந்த விபின் ராவத் உள்ளிட்டோருக்கு அவை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.