முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
தில்லியில் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


தில்லியில் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர். இவர்களின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் சூலூரிலிருந்து இன்று மாலை ராணுவ விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிக்க- 57 நாடுகளில் ஒமைக்ரான் பரவல்: உலக சுகாதார அமைப்பு தகவல்
இந்த நிலையில் தில்லி பாலம் விமான தளத்தில் முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

மேலும் மறைந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அத்துடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பட், பாதுகாப்பு ஆலாசகர் அஜித்தோவல் உள்ளிட்டோரும் ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து நாளை விபின் ராவத் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். அஞ்சலிக்கு பிறகு பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் காமராஜ் சாலை வழியாக தில்லி கண்டோன்மென்டில் உள்ள மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு முழு அரசு மரியாதையுடன் 2 பேரின் உடல்களும் தகனம் செய்யப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...