ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விபின் ராவத் மறைவு: நாடாளுமன்ற இரு அவைகளிலும் அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:08 am

DIN

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் சூலூரிலிருந்து ராணுவ விமானம் மூலம் இன்று தில்லி கொண்ட வரப்படவுள்ளது. தொடர்ந்து நாளை முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.