புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை: மத்திய ரயில்வே அமைச்சர்

நாட்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 டிசம்பர் 2021, 3:37 pm

DIN

நாட்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி
வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இகுதுறித்து அவர் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்தியாவில் இதுவரை 6,071 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வசதி பொதுமக்களுக்கு முதல் அரை மணி நேரம் இலவசமாகவும், தொடர்ந்து கட்டண முறையிலும் வழங்கப்படுகிறது. 

ரயில் நிலையங்களில் பயணிகள் இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ள இந்த வசதி வகை செய்கிறது. இந்த ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட இணைய சேவைக்கான டேட்டா மாதத்திற்கு தோராயமாக 97.25 டெராபைட்ஸ் ஆகும். 

இதற்கென ரயில்வே அமைச்சகம் தனி நிதி ஒதுக்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.