பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிரத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2021, 2:22 pm

DIN


மகாராஷ்டிரத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. அதில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நிலவரம் பற்றி தரவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, மாநிலத்தில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வசை விராரைச் சேர்ந்தவர். 

மகாராஷ்டிரத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

புதிதாக பாதிப்புக்குள்ளான 8 பேரில் 3 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள். இவர்களது மாதிரிகள் அனைத்தும் டிசம்பர் முதல் வாரத்தில் சேகரிக்கப்பட்டன. 3 பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. 5 பேருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. முதற்கட்ட தகவலின்படி இவர்கள் அனைவரும் எவ்வித சர்வதேச பயணமும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் பெங்களூருவுக்கும் மற்றொருவர் தில்லிக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். மும்பையில் பாதிக்கப்பட்ட ஒருவர் ராஜஸ்தானிலிருந்து திரும்பியவர்.

8 பேரில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 8 பேரில் 7 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.