புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொடரும் அமளி: மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2021, 5:57 am

DIN

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி தொடர்வதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கோரியும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். இதையடுத்து பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.