இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் புறப்பட்டார் ராம்நாத் கோவிந்த்!

அரசுமுறைப் பயணமாக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் டாக்கா புறப்பட்டார்.

News image

அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் டாக்கா புறப்பட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Updated On :15 டிசம்பர் 2021, 10:21 am IST

புதுதில்லி:  அரசுமுறைப் பயணமாக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்கதேசம் டாக்கா புறப்பட்டார்.

பாகிஸ்தானுடன் வங்கதேசம் நடத்திய போரின் 50 ஆவது வெற்றி தினம், நாடு உதயமான 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் நாளை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (டிச.16,17) என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வங்கதேசம் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

இதையடுத்து வங்கதேச அழைப்பை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினராக இரண்டு  நாள் அரசுமுறைப் பயணமாக வங்கதேசம் டாக்காவிற்கு புதன்கிழமை காலை தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.