போராட்ட களமாக மாறிய நாகாலாந்து...ஒத்துழையாமை இயக்கத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு

அப்பாவிகள் 14 பேர் சுட்டுகொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டி, ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்ட களமாக மாறிய நாகாலாந்து
போராட்ட களமாக மாறிய நாகாலாந்து

நாகாலாந்து மான் மாவட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டின்போது 14 அப்பாவிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், நாகாலாந்து போராட்ட களமாக மாறியுள்ளது.

மாநிலத்தின் தலைநகர் கோஹிமாவில் மாபெரும் வெடித்துள்ளது. நாகா மாணவர் கூட்டமைப்பு என்ற செல்வாக்கு மிக்க மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். அதேபோல், ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை திரும்பப் பெற கோரி வலியுறுத்திவருகின்றனர்.

"ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீக்குவதற்கு முன்பு இன்னும் எத்தனை முறை துப்பாக்குச்சூடு நடத்தப்படவுள்ளது", "இந்திய ராணுவத்தில் இருக்கும் பேயை பேணி காத்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்", "தடை செய்ய வேண்டியது எங்கள் குரலை அல்ல, ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி, மக்கள் மத்தியில் இந்த சம்பவம் கொந்தளிப்பை அதிகரித்தியுள்ளதால் இது போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

கொன்யாக் பழங்குடியின அமைப்பின் இந்த ஒத்துழையாமை போராட்டத்தை, தற்போது கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு கையில் எடுத்துள்ளது. தேசிய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் ராணுவத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு மறுக்கப்படும் என்றும் கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

நாகாலாந்தின் கிழக்கு பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்தது. குறிப்பாக, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் தெருக்களில் இறங்கு போராட்டம் நடத்திவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com