சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News image
பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது
Updated On :17 டிசம்பர் 2021, 5:42 am

DIN

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பூடான் நாட்டின் 114-வது தேசிய நாளான இன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு  ’நகடக் பெல் ஜி கோர்லோ’ என்கிற உயரிய விருதை அளிப்பதாக பூடான் அரசு அறிவித்திருக்கிறது. இதைப் பகிர்ந்துகொண்ட அந்நாட்டு பிரதமர் மோடியின் பெயர் விருதிற்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பூடான் சென்ற மோடி 'இந்தியாவும் - பூடானும் இயல்பான நட்பு நாடுகள் என்றும் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்றை புரிந்துகொண்டு பகிர்ந்துகொள்வதைப் போல் உலகில் வேறு எந்த 2 நாடுகளும் இல்லை’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.