மங்களூரு செவிலியர் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், 7 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு செவிலியர் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
மங்களூரு செவிலியர் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு


மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், 7 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் 7 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் கல்லூரிக்கு வரும்போது, கரோனா இல்லை என்ற சான்றிதழுடன்தான் வந்துள்ளனர். எனினும், முதலாமாண்டு பயிலும் 43 மாணவிகளுக்கு சோதனை செய்யப்பட்டதில், 7 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com