ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்: ராஜ்நாத் சிங் 

"எண்ணிலடங்கா பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்"

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2021, 11:20 am

DIN

இந்திய தொழில்துறை மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு மாநாடு இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "எண்ணிலடங்கா பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். 

இதை, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட கூட்டு நாடுகளிடம் தெரிவித்துள்ளோம்" என்றார். பிராந்திய பூவிசார் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், "இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடையாத சில அண்டை நாடுகளை கடவுள் கொடுத்துள்ளார், பிரிவினை காரணமான உருவான நாடு, இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்பட்டு பலவீனம் அடைந்துள்ளது. 

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பெரும்பான்மை நாடுகள் இந்தியாவின் நண்பர்களே. அதே நேரத்தில், இந்திய பாதுகாப்பு படைக்கு தேவைப்படும் ராணுவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்போம் என அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே ராணுவ தளங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை உற்பத்தி செய்ய விரும்புகிறோம் என்று ஒவ்வொரு நட்பு நாடுகளிடமும் கூறியுள்ளோம். 

இதை தெரிவிக்க நாங்கள் தயங்க மாட்டோம். வாருங்கள், இந்தியாவில் வந்து உற்பத்தி செய்யுங்கள். இந்தியாவுக்காக உற்பத்தி செய்யுங்கள். உலகுக்காக உற்பத்தி செய்யுங்கள்.

வெள்ளிக்கிழமை பிரெஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஒரு பெரிய பிரெஞ்சு நிறுவனம் இந்தியாவில் ஒரு இந்திய நிறுவனத்துடன் கைகோர்த்து வியூக கூட்டாண்மை மாதிரியின் கீழ் ஒரு "இயந்திரத்தை" தயாரிப்போம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இந்தியா இந்த நாடுகளுடன் நட்பைப் பேணும் அதே நேரத்தில் இந்திய மண்ணில் முக்கிய தளங்களைத் தயாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கத் தயங்காது. நான் மிகவும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் சொல்கிறேன். அவர்களிடமிருந்து எனக்கு நேர்மறையான பதில் கிடைத்ததை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.