40,000 ஆண்டுகளாக, இந்தியர்களின் டிஎன்ஏ ஒரே மாதிரியாகத்தான் உள்ளது: ஆர்எஸ்எஸ் தலைவர்

40,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியர்களின் டிஎன்ஏவும் தற்போதுள்ள இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இமாச்சலப் பிரதேசம் தரம்சாலாவில் முன்னாள் ராணுவ வீரர்களை கெளரவிக்கும் வகையில் சனிக்கிழமை மாலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்தியில் இருக்கும் பாஜக தலைமையிலான அரசை ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தவில்லை என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "வெவ்வேறு நிர்வாகிகள், வெவ்வேறு கொள்கைகள், வெவ்வேறு வேலை முறைகளை மத்திய அரசு வைத்துள்ளது. எண்ணங்களும் பண்பாடுகளும் மட்டுமே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தது. அது பயனுள்ளது. அரசில் உள்ள முக்கிய நபர்கள் ஆர்எஸ்எஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள். 

அவர்கள் அப்படியே இருப்பார்கள். அத்தகைய உறவு மட்டுமே உள்ளது. ஊடகங்கள் சொல்வது போல 'ரிமோட்டின் மூலம் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கங்கள் எங்களுக்கு எதிராக இருந்திருக்கின்றன. எங்களுக்கு எதிராக எதிர்ப்பு இருந்து வருகிறது. ஆர்எஸ்எஸ் 96 ஆண்டுகளாக அனைத்து தடைகளையும் தாண்டி இயங்கி வருகிறது. 

மேலும் பல தொண்டர்கள் தயாராகி வருவதால் அவர்கள் அமைதியாகவோ சும்மா இருக்கவோ மாட்டார்கள். சமுதாயத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியம் எங்கிருந்தாலும், அவை எப்போதும் கிடைக்கின்றன. ஸ்வயம்சேவகர்கள் செய்த பணிகள், அவர்கள் நாடாளுமன்றத்தை மட்டும் நடத்தவில்லை, சமுதாய மக்களைத் தம்முடன் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் சுதந்திரமானவர்கள். தன்னாட்சி பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கிறது.

விளம்பரம், பொருளாதார பலம், அரசு உதவி எதுவுமின்றி சமுதாயத்திற்காக ஆர்எஸ்எஸ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய மக்கள் அனைவரின் டிஎன்ஏவும் இன்றைய இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான். நம் அனைவரின் முன்னோர்களும் ஒன்றுதான். அந்த முன்னோர்களால்தான் நம் நாடு செழித்தது, கலாச்சாரம் தொடர்ந்தது" என்றார்.

முன்னதாக, குன்னார் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com