துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நியமனம்
சீனத் தூதராக மூன்றாண்டு காலம் பதவி வகித்த விக்ரம் மிஸ்ரி துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.


புது தில்லி: சீனத் தூதராக மூன்றாண்டு காலம் பதவி வகித்த விக்ரம் மிஸ்ரி துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
சீனாவுக்குப் புதிய தூதராக பிரதீப்குமாா் ராவத் நியமிக்கப்பட்ட நிலையில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளாா். தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலின் கீழ் விக்ரம் மிஸ்ரி பணியாற்றுவாா் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கல்வான் தாக்குதல் உள்பட சீனாவுடனான முக்கிய எல்லைப் பிரச்னைகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதராக விக்ரம் மிஸ்ரி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. சீனத் தூதராக மூன்றாண்டுகள் அவா் பணியாற்றினாா்.
இந்திய வெளியுறவுப் பணியின் 1989-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த விக்ரம் மிஸ்ரி, வெளியுறவு அமைச்சகத்திலும் பிரதமா் அலுவலகத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். மேலும் ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின் பல்வேறு இந்திய தூதரகங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ளவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...