கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இதுவரை 443.49 லட்சம் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு

நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 443.49 லட்சம் டன் நெல்லை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 டிசம்பர் 2021, 10:42 pm

புது தில்லி: நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 443.49 லட்சம் டன் நெல்லை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் 95,310 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘2021-22-ஆம் ஆண்டுக்கான காரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமைவரை தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, பிகாா், சண்டீகா், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ரூ.86,924 கோடி மதிப்பு கொண்ட 443.49 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 47.03 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ 1,338 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 95,310 தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.