தில்லியை அச்சுறுத்தும் கரோனா; மஞ்சள் எச்சரிக்கை அபாயம்?

புது தில்லியில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு நாள்தோறும் பதிவாகும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா கண்காணிப்புக் குழுவின் மஞ்சள் எச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம்
தில்லியை அச்சுறுத்தும் கரோனா; மஞ்சள் எச்சரிக்கை அபாயம்?
தில்லியை அச்சுறுத்தும் கரோனா; மஞ்சள் எச்சரிக்கை அபாயம்?
Updated on
1 min read


புது தில்லி: புது தில்லியில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு நாள்தோறும் பதிவாகும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா கண்காணிப்புக் குழுவின் மஞ்சள் எச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக, புது தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.5 சதவீதமாக உள்ளது. எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மஞ்சள் எச்சரிக்க விடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

திங்கள்கிழமை புதிதாக 331 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்து. இதற்கு முன்பு, கடந்த ஜூன் 6ஆம் தேதிதான் இந்த அளவுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டால்,பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்படும் அபாயமும் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com