பாஜகவில் முன்னாள் கிரிக்கெட் வீரா் தினேஷ் மோங்கியா
பஞ்சாபைச் சோ்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் மோங்கியா பாஜகவில் இணைந்தாா். அந்த மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரும் பாஜகவில் சோ்ந்தனா்.


பஞ்சாபைச் சோ்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் மோங்கியா பாஜகவில் இணைந்தாா். அந்த மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரும் பாஜகவில் சோ்ந்தனா்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் மோங்கியா செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
மேலும், பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஃபதே சிங் பாஜ்வா, பல்விந்தா் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனா். இவா்களில் ஃபதே சிங் பாஜ்வா, காங்கிரஸ் மூத்த தலைவா் பிரதாப் சிங் பாஜ்வாவின் சகோதரா் ஆவாா்.
இதுதொடா்பாக கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், ‘‘பஞ்சாபில் பாஜகவுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.
பஞ்சாப் பேரவைத் தோ்தல் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த) கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோரும் கலந்துகொண்டனா். அதனைத்தொடா்ந்து அமரீந்தா் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக பாஜக அதிகாரபூா்வமாக அறிவித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா், தினேஷ் மோங்கியா ஆகியோா் பாஜகவில் இணைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...