தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலேவுக்கு கரோனா

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :29 டிசம்பர் 2021, 10:38 am

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உருமாறிய கரோனா வைரஸ் வகையான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவுக்கும், அவரது கணவர் சதானந்த் பால்சந்திரா சுலேவுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுப்ரியா சுலே தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனக்கும் எனது கணவருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. எங்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.