தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜஸ்தானில் இன்று மட்டும் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

ராஜஸ்தானில் இன்று மட்டும் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :29 டிசம்பர் 2021, 10:27 am

DIN

ராஜஸ்தானில் இன்று மட்டும் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இதில் 37 பேர் வரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மாநிலத்தில் ஜெய்ப்பூர், உதய்பூர், அஜ்மீர் ஆகிய பகுதிகளில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 540 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக தில்லியில் 238 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 167 பேருக்கும், குஜராத்தில் 73 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.