தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அடுத்த பிரதமராக வருவதற்கு உங்களுக்கு வாய்ப்புள்ளதா?...சரத் பவாரின் சுவாரஸ்ய பதில்

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜகவுடன் கூட்டணியில் இணைந்த அஜித் பவார், ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது.

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2021, 7:55 am

DIN

கடந்த 2019ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனா பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பொறுப்பு தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி கூட்டணியிலிருந்து வெளியேறியது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தார்.

இதனை தொடர்ந்து, முதல்வராக தேவேந்திர பட்னாவிஸூம் துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பு ஏற்று கொண்டனர். ஆனால், சரத் பவாரின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதால், தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை அவரால் பெற முடியவில்லை. பின்னர், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. 

இதற்கு மத்தியில், பாஜகவுடன் உறவை முறித்து கொண்ட அஜித் பவாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த அரசியல் நிகழ்வு குறித்து மனம் திறந்துள்ள சரத் பவார், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அஜித் பவாரை தான் அனுப்பியிருந்தால், அந்த கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் இருப்பதை தான் உறுதி செய்திருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மராத்திய நாளிதழான லோக்சட்டா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "நான் அவரை (அஜித் பவாரை) அனுப்பியிருந்தால், அவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந்திருப்பார்கள். அதனை நான் உறுதி செய்திருப்பேன். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், நிர்வாக அனுபவமுள்ள மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டனர்" என்றார்.

2024 மக்களவை தேர்தல் முடிவு வெளியான பிறகு, நீங்கள் பிரதமராக வாய்ப்புள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.