2021 நிறைவு: தடுப்பூசி இலக்கு என்னவானது? மத்திய அரசை விமர்சிக்கும் ராகுல்

தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவோம் எனத் தெரிவித்த மத்திய அரசின் வாக்குறுதி என்னவானது? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல்காந்தி
ராகுல்காந்தி

தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவோம் எனத் தெரிவித்த மத்திய அரசின் வாக்குறுதி என்னவானது? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவோம் என கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திவிடுவோம் என மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. இன்றுடன் இந்த வருடம் முடிய இருக்கிறது. இன்றைக்கும் கூட அனைவருக்கும் தடுப்பூசி சென்று சேரவில்லை” என தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் 144.67 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 84.51 கோடி பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 60.15 கோடி பேர் இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com