மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

'சுவர்கள் வேண்டாம்; பாலங்களைக் கட்டுங்கள்' - ராகுல் காந்தி

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க தில்லியில் தடுப்புகளை அமைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
தில்லி எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள முள்வேலிகள்
Updated On :2 பிப்ரவரி 2021, 7:06 am

DIN

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க தில்லியில் தடுப்புகளை அமைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் தில்லி எல்லைகளில் 70 நாள்களைக் கடந்து  முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

இதுவரை மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில்  விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தில்லியில் நடைபெற்ற மாபெரும் டிராக்டர் பேரணியை கலவரத்தில் முடிந்தது. 

இதையடுத்து, விவசாயிகள் மீண்டும் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து தில்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு எதிர்க்கட்சிகள் பல கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வரும் புகைப்படங்களைப் பகிர்ந்து, "சுவர்களை கட்டாதீர்கள்; பாலங்களைக் கட்டுங்கள்" என்று பதிவிட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.