மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

முள்வேலிகள், கான்க்ரீட் தடுப்புகள், தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணி: தில்லி காவல்துறை தீவிரம்

தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. 

News image
தில்லி எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்
Updated On :2 பிப்ரவரி 2021, 6:41 am

DIN

தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் தில்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் குளிரிலும் 70 நாள்களைக் கடந்து  போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

இதுவரை மத்திய அரசுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில்  விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தில்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். ஆனால் இந்த பேரணி கலவரத்தில் முடிந்தது. 

Story image

இதையடுத்து, போராட்டம் வன்முறையாக மாறியதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் உள்ளனர். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தண்ணீர், மின்விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம், இணையசேவை முடக்கம் என நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக முள்வேலி அமைத்து தில்லி எல்லைகளை மூடி வருகிறது. 

Story image

காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து தில்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. நடந்து வருவோரைத் தடுக்க சாலைகளில் ஆணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் எல்லைகளில் தற்காலிக தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணியிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது. 

குடியரசு தினத்தன்று ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்த நிலையில் இனி விவசாயிகளை தில்லிக்குள் நுழையக் கூடாது என்ற அடிப்படையில் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப தடுப்புகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.