தில்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.
குடியரசு நாளன்று ஏற்பட்ட கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது. செங்கோட்டையில் நடந்த சம்பவமும், தேசியக் கொடிக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பும், குடியரசுக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் ஏதிரானது.
குடியரசு நாளன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி மரியாதை செலுத்திய அதே இடத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் அதே வேளையில் விவசாயிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்வதை கைவிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பிரதிநிதியாக முன்னிருத்தப்படும் ஒரு நபர் எவ்வாறு தேசதுரோகியாக முடியும். மக்களால் தேர்வு செய்யபட்ட ஒரு எம்.பி. எவ்வாறு தேசத்துரோகியாக முடியும். அவர் தேசத்துரோகி என்றால் நாம் அனைவரும் தேசத்துரோகிதான் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கும்! - உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


