மாநிலங்களவையில் மீனவர் பிரச்னையை எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாநிலங்களவையில் இன்று தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.


புது தில்லி: இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாநிலங்களவையில் இன்று தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
மாநிலங்களவை இன்று காலை கூடியதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் கண்டனம் வெளியிட்டார்.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.
மீனவர் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது. இலங்கை அரசிடம் இது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...