சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ரமலான் பண்டிகையில் சிபிஎஸ்இ தேர்வு: தேதியை மாற்ற சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

News image

ரமலான் பண்டிகையன்று சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்றுக: சு. வெங்கடேசன் எம்.பி.

Updated On :6 பிப்ரவரி 2021, 9:32 am

ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு இது குறித்து அனுப்பியிருக்கும் கடிதத்தில், சு. வெங்கடேசன் கூறியிருப்பதாவது, ரமலான் பண்டிகை மே-14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பிறையின் அடிப்படையில் மே-13 அல்லது 15-ஆம் தேதியிலும் பண்டிகை அமையலாம். 

ஆனால் இந்த இரு தேதியிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவ, மாணவிகளை அவர்களது முக்கிய பண்டிகை நாளில் தேர்வெழுத வைப்பது சரியாக இருக்காது. 

எனவே, ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.