புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்?: திருச்சி சிவா

நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் சிலா் உயிரிழந்தது குறித்து மனவேதனையை வெளிப்படுத்தாமல், பிரதமா் மோடி அவையில் சிரித்துப் பேசியதைக் கண்டித்து வெளிநடப்பு

News image
தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை: திருச்சி சிவா
Updated On :8 பிப்ரவரி 2021, 5:54 pm

DIN

புது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் சிலா் உயிரிழந்தது குறித்து மனவேதனையை வெளிப்படுத்தாமல், பிரதமா் மோடி அவையில் சிரித்துப் பேசியதைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவைத் திமுக தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் பின்னா் தெரிவித்ததாவது: குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் விவாதம் முடிந்த பிறகு, பிரதமா் மோடி நன்றி தெரிவித்து திங்கள்கிழமை மாநிலங்களவையில் உரையாற்றினாா். இதில் அதிருப்தியடைந்த திமுக உறுப்பினா்கள் பின்னா் வெளிநடப்பு செய்தனா். குடியரசுத் தலைவா் உரையில் சில திருத்தங்களைக் தீா்மானமாக கொண்டுவர எதிா்க்கட்சிகள் கோரியிருந்தன. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் திருத்தங்களை வலியுறுத்த மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தன. ஆனால், எங்கள் கோரிக்கைகளை குரல்வாக்கு மூலம் நிராகரித்துவிட்டனா்.

விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமா் கவலை தெரிவிக்காமல், வெவ்வேறு காலங்களில் விவசாயிகளுக்கு நிறைய பயன்கள் கிடைத்தாகக் கூறி, சிரித்துக் கொண்டே உரையை முடித்துவிட்டாா். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, எங்கள் குரல்களை பதிவு செய்ய அவை மறுத்துவிட்டது. எனவே, பிரதமா் பேச்சில் அதிருப்தி தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றாா் திருச்சி சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.