பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பெட்ரோல், கேஸ் விலை உயர்வு: பெங்களூருவில் காங். போராட்டம்

பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

எரிபொருள்களின் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Updated On :9 பிப்ரவரி 2021, 9:45 am

பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையுயர்வைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில்,  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ.25 முதல் அதிகரித்துள்ளது.

இதனைக் கண்டித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாலைகளில் அடுப்புகளை எரியூட்டி சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

மேலும் சிலர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படம் அடங்கிய பதாகையை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஏராளமான பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.