பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

'இந்தியப் பகுதிகளை விட்டுக்கொடுத்ததை நேருவிடம் தான் கேட்க வேண்டும்'

இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்பதை ராகுல்காந்தி தனது தாத்தா நேருவிடம் தான் கேட்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image
மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி
Updated On :12 பிப்ரவரி 2021, 7:48 am

DIN

இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்பதை ராகுல்காந்தி தனது தாத்தா நேருவிடம் தான் கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முக்கிய மலை உச்சியை சீனாவிடம் இந்தியா விட்டுக்கொடுத்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியதற்கு கிஷன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

கைலாஷ் சிகரத்திலிருந்து இந்திய வீரர்கள் விலகிக்கொள்வது ஏன் சீனாவிடம் சரண்டைந்துவிட்டதற்கு சமம் என்று ராகுல்காந்தி கூறியிருந்தார்.

லடாக் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க படைகளை திரும்பப் பெற்றுக்கொள்வது சீனாவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் செய்தியாளர்கள் கேளவி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்பதை ராகுல்காந்தி தனது தாத்தா நேருவிடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்துச் சென்றார்.

தேச பக்தர்கள் யார், யார் தேச பக்தர் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.