பாட்னா: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளத் தடை

மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்வதற்கு பாட்னா மாநகராட்சி தடை விதித்துள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்திகரிக்க பாட்னா மாநகராட்சித் தடை
மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்திகரிக்க பாட்னா மாநகராட்சித் தடை


மனிதக் கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்வதற்கு பாட்னா மாநகராட்சி தடை விதித்துள்ளது. கழிவுகளை மனிதர்கள் சுத்தம் செய்வதற்கு பதிலாக இயந்திரத்தைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மனிதக் கழிவுகளையும், கழிவுநீர்த் தொட்டிகளையும் குறிப்பிட்ட மனிதர்களே சுத்தம் செய்யும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பாட்னா மாநகராட்சி மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு தடை விதித்துள்ளது.

அதற்கு பதிலாக சிலந்தி வடிவிலான இயந்திரத்தைப் பயன்படுத்தி கழிவுகளையும், கழிவுநீர்த் தொட்டிகளையும் சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஐக்கிய நாடுகள் அவையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை நிதியின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பாட்னா மாநகராட்சியில் 500 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. ஏழை மக்களுக்காக சாலையோரம் 25 பொதுக் கழிவறைகளைக் கட்டவும் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com