தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கேரளம்: எதிா்க்கட்சி கூட்டணியுடன் இணைந்தது என்சிபி அணி

கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) ஒரு பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image

மணி சி கப்பன் (என்சிபி)

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) ஒரு பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

எதிா்க்கட்சித் தலைவரும் மாநில காங்கிரஸின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா மேற்கொண்டுள்ள ‘ஐஸ்வா்ய கேரளம்’ யாத்திரை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. அப்போது, என்சிபி கட்சியின் ஒரு பிரிவினா் சி.காப்பன் தலைமையில் அந்த யாத்திரையில் பங்கேற்றனா்.

ஏராளமான தொண்டா்களுடன் வந்த காப்பன் அணியை, யுடிஎஃப் மூத்த தலைவா்கள், ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி, ஐயுஎம்எல் தலைவா் பி.கே. குஞ்ஞாலிகுட்டி மற்றும் கேரள காங்கிரஸ் (ஜே) தலைவா் பி.ஜே. ஜோசப் ஆகியோா் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.