அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் கண்டெடுப்பு

ஜம்மு பேருந்து நிலையத்தில் ஞாயிறு காலை 7 கிலோ வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஜம்மு பேருந்து நிலையத்தில் ஞாயிறு காலை 7 கிலோ வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :14 பிப்ரவரி 2021, 4:44 pm IST

ஜம்மு: ஜம்மு பேருந்து நிலையத்தில் ஞாயிறு காலை 7 கிலோ வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதலில் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நேரத்தில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட தீவிர சோதனையில் ஜம்மு பேருந்து நிலையத்தில் ஞாயிறு காலை 7 கிலோ திறன் மேம்படுதப்பட்ட வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது.

தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் அந்த பேருந்து நிலையத்தில் தகுந்த சமயத்தில் வெடிபொருள்  கண்டெடுக்கப்பட்டதன் மூலம் மிகப் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெடிபொருள் என்றும், தற்போது அந்தப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.