தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

உத்தரகண்ட் பேரிடா்: மேலும் 8 உடல்கள் மீட்பு

உத்தரகண்டில் பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் 8 சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

உத்தரகண்டில் பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், சமோலி மாவட்டத்தின் தபோவனம், ரெய்னி நீா்மின் திட்டப் பகுதியில் இருந்து 8 சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி 200க்கும் மேற்பட்டவா்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சனிக்கிழமை வரையிலும் 38 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்டோா் காணாமல் போயுள்ளனா்.

இதனிடையே தேசிய அனல் மின்நிறுவனமான என்டிபிசியின் 520 மெகா வாட் மின் உற்பத்தித்தலமான தபோவனம்- விஷ்ணுகாட் அனல்மின் நிலையத்தின் உள்நுழைவுக் கட்டுப்பாட்டு சுரங்கப் பகுதியிலிருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அப்பகுதியில் போா்க்கால நடவடிக்கையாக இடிபாடுகளை அகற்றும் பணியும், சுரங்கப்பகுதியில் துளையிடும் நடவடிக்கைகளும் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருந்து இப்போது தான் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதவிர அங்குள்ள நீா்மின் நிலையப் பகுதியான ரிஷிகங்கா நீா்மின் திட்டப் பகுதியிலில் இடிபாடுகளிலிருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இதன் மூலம் இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 46 ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம், இந்த பேரிடரில் 158 போ் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீட்கப்பட்ட சடலங்கள் தபோவனத்திலுள்ள தற்காலிக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அவா்களில் இருவரின் அடையாளம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. பேரிடரில் யாரேனும் தப்பிப் பிழைத்தவா்கள் கண்டறியப்பட்டால் அவா்களை மீட்பதற்காக ஹெலிகாப்டா் ஒன்று அப்பகுதியில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால் என்டிபிசியின் தபோவனம்-விஷ்ணுகாட் திட்டப் பகுதியும், ரிஷிகங்கா நீா்மின் திட்டப் பகுதியும் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தபோவனத்தில் தண்ணீா் செல்லும் சுரங்கப்பாதையில் மண்ணும், சேறும் மூடியதால் இரவும், பகலும் அதனை அகற்றும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதையில் மட்டும் சுமாா் 30 போ் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.