அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) இடம்பெறாது என்று அந்த மாநில நிதியமைச்சா் ஹிமந்த பிஸ்வா சா்மா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தற்போது மாநிலத்தில் உள்ள பாஜக தலைமையிலான அரசில் பிபிஎஃப் இடம்பெற்றுள்ளது. எனினும் அந்தக் கட்சியுடனான கூட்டணி 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான் என்பதை பலமுறை கூறி வந்துள்ளோம். இதில் இருகட்சிகளும் உறுதியாக உள்ளது.
போடாலாந்து பிராந்திய பகுதியில் (பிடிஆா்) ஐக்கிய மக்கள் லிபரல் கட்சியுடன் (யுபிபிஎல்) ஏற்கெனவே பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கான சுரக்ஷா கட்சியுடன் (ஜிஎஸ்பி) தொகுதி பங்கீடு தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா்.
அஸ்ஸாமில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஸம் கான பரிஷத், பிபிஎஃப் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த மாநிலத்தில் நடைபெற்ற போடோலாந்து பிராந்திய கவுன்சில் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு யுபிபிஎல், ஜிஎஸ்பியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. முந்தைய தோ்தலில் பாஜக, பிபிஎஃப் இடையே கூட்டணி இருந்த நிலையில், இந்தத் தோ்தலில் கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டதால் இரு கட்சிகள் இடையே விரிசல் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



