மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இலங்கை, நேபாளத்தில் கட்சியை விரிவுபடுத்த அமித் ஷா திட்டம்: திரிபுரா முதல்வர் பேச்சு

அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கட்சியை விரிவுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 பிப்ரவரி 2021, 11:09 am

DIN

அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கட்சியை விரிவுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது என அமித் ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப், அகர்தலாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசினார். 

அப்போது பேசிய அவர், 'கட்சியின் தலைவராக அமித் ஷா இருந்தபோது நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. அவர் எந்த மாநிலத்திற்குச் செல்கிறாரோ அங்கு கட்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். 

அப்போது குறுக்கிட்ட மாநில பாஜக அமைச்சர், நேபாளமும் இலங்கையும் இன்னும் எஞ்சியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் கூறிய முதல்வர் பிப்லாப் குமார் தேப், 'இலங்கை மற்றும் நேபாளத்திற்கும் கட்சியை விரிவுபடுத்த வேண்டும் என்று அமித் ஷா கூறினார். அங்கேயும் நாம் வெற்றி பெற வேண்டும்' என்று கூறியுள்ளார். இப்போது இவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

முன்னதாக, 'மகாபாரதம் காலத்திலேயே இன்டர்நெட், செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டுள்ளது', 'இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதியின் பின்னால் அலையாமல் பீடா கடை வைத்தோ அல்லது மாடு மேய்த்தோ பிழைக்கலாம்' என பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்குச் சொந்தக்காரர் பிப்லாப் குமார் தேப் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.