பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) லிட்டருக்கு ரூ.7 வரை மேகாலய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், மேகாலய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் உயா்த்தி வருகின்றன.
நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியுள்ளது. மேகாலயத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.92.90-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.86.23-க்கும் விற்பனையானது. தொடா் விலை உயா்வுக்குப் பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதாக மாநில அரசு கடந்த வாரம் அறிவித்தது.
எனினும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து உயா்த்தின. அதைக் கண்டித்து மேகாலயத்தில் வணிகப் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளா்கள் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 5 ரூபாய் 4 காசுகளையும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 5 ரூபாய் 1 காசையும் குறைப்பதாக மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை லிட்டருக்கு ரூ.7 வரை மேகாலய அரசு குறைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

காலிறுதியில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி ஆதிக்கம்..! களமிறக்கப்படாத முகமது சாலா!
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


