
பிரபல வங்காள நடிகர் யாஷ் தாஸ்குப்தா பல்வேறு நடிகர்களுடன் புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா மற்றும் கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் ஆகியோர் அவர்களை வரவேற்று கட்சியில் இணைத்தனர்.
கட்சியில் இணைந்தது பற்றி நடிகர் யாஷ் தாஸ்குப்தா கூறியது:
"பாஜக எப்போதுமே இளைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. அனைவரும் மாற்றத்திற்காகப் பணியாற்ற வேண்டும்."
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
திரிணமூல் எம்.பி.யும் நடிகையுமான நுஸ்ரத் ஜஹானுக்கு யாஷ் தாஸ்குப்தா நெருங்கிய நண்பர் என்று கருதப்படுவதும் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.