பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காங். மூத்த தலைவர் மறைவு: இறுதி ஊர்வலத்தில் உடலைத் தூக்கிச் சென்ற ராகுல்

காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ராகுல் காந்தி அவரது உடலைத் தாங்கிச் சென்றார்.

News image
காங். மூத்த தலைவர் மறைவு: இறுதி ஊர்வலத்தில் உடலைத் தாங்கிய ராகுல்
Updated On :19 பிப்ரவரி 2021, 6:56 am

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ராகுல் காந்தி அவரது உடலைத் தாங்கிச் சென்றார்.

இடுகாட்டிற்கு அவரது உடலை எடுத்துச் செல்லும்போது நான்கு பேரில் அவரும் ஒருவராக வந்து உடலைத் தூக்கிச் சென்றார்.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்  கேப்டன் சதீஷ் சர்மா, கோவாவில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை (பிப்.17) இரவு அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்கிற்காக தில்லி எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு அவரது இறுதி மரியாதையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

இதில் பங்கேற்ற ராகுல் காந்தி சதீஷ் சர்மாவின் உடலைத் தூக்கிச் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.