சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திஷா ரவி ஜாமீன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

​சூழலியல் ஆர்வலர் திஷா ரவி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 23-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :20 பிப்ரவரி 2021, 12:58 pm

DIN


சூழலியல் ஆர்வலர் திஷா ரவி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 23-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான 'டூல் கிட்' வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவல் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி திஷா ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.