'டூல் கிட்' வழக்கு: திஷா ரவியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

​'டூல் கிட்' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது.
'டூல் கிட்' வழக்கு: திஷா ரவியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


'டூல் கிட்' வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது.

தில்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பான 'டூல் கிட்' வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி (21) கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் வைத்து தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் 5 நாள்கள் நீதிமன்றக் காவல் வைக்கப்பட்டார். 

இதையடுத்து, உடன் குற்றம்சாட்டப்பட்டவர்களான நிகிதா ஜேக்கப் மற்றும் ஷாந்தனு முலக் ஆகியோர் பிப்ரவரி 22-ம் தேதி விசாரணை ஆஜராகும்போது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றக் காவல் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டன.

இந்த நிலையில், அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com