காா்த்தி சிதம்பரம் வெளிநாடுசெல்ல நிபந்தனையுடன் அனுமதி
ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய நேரடி முதலீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சா் ப. சிதம்பரத்தின் மகனுமான காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி


ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய நேரடி முதலீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சா் ப. சிதம்பரத்தின் மகனுமான காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்தது.
இதுதொடா்பாக காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘முன்பு ரூ.10 கோடி செலுத்திவிட்டுதான் காா்த்தி வெளிநாடு சென்றாா். தற்போதும் அதே அளவு தொகையை செலுத்த வேண்டும்’ என்றாா்.
‘காா்த்தி சிதம்பரம் எம்.பி.யாக உள்ளதால் எங்கும் தப்பிவிட மாட்டாா்’ என்று அவரது சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதாடினாா்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘ரூ.2 கோடியை டெபாசிட்டாக செலுத்திவிட்டும், எந்த நாட்டில் எங்கு தங்குகிறாா் என்ற விவரங்களை அளித்துவிட்டும் காா்த்தி சிதம்பரம் செல்லலாம்’ என்று உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...