கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கல்குவாரியில் நேரிட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, இந்த கல்குவாரியில் காவல்துறை சோதனை நடைபெறலாம் என்ற அச்சத்தில், ஜெலட்டின் குச்சிகளை தொழிலாளர்கள் அகற்றும் போது இந்த வெடிவிபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெலட்டின் குச்சிகள் வெடித்த வேகத்தில், அங்கு இருந்த தொழிலாளர்களின் உடல்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன.
இது குறித்து தாலுகா துணை ஆணையர் ஆர். லதா கூறுகையில், காவல்துறையினரின் சோதனையில் சிக்காமல் இருக்க ஜெலட்டின் குச்சிகளை அகற்றும் போது இந்த வெடி விபத்து நேரிட்டுள்ளது. விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்காதக் காரணத்தால் சில நாள்களுக்கு முன்புதான் இந்த கல்குவாரி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பலியாகினர். அவர்களது உடல் பாகங்கள் சம்பவ இடத்தில் சிதறிக் கிடக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


