மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி

வடக்கு தில்லியின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

News image

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி

Updated On :27 பிப்ரவரி 2021, 6:33 am

வடக்கு தில்லியின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை 3.47 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 

தீயணைப்பு நடவடிக்கையின் போது தீயணைப்பு வீரர்களில் ஒருவரின் விரலில் லேசான காயம் ஏற்பட்டது, ஆனால் அந்த இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தொழிற்சாலையின் முதன் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து இரண்டாவது தளத்திற்கும் பரவியது. 

பின்னர், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் நெயில் பாலிஷ் ஆகிய பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. முதல் தளத்தில் எரிந்த நிலையில் ஒருவரின் உடலை தில்லி தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர். 

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகத் தீயணைப்பு இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.