புதுதில்லி: மார்ச் 2026 உடன் முடிவடைந்த 4வது காலாண்டில், எஸ்பிஐ கார்டு & பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் லாபம் 14 சதவீதம் உயர்ந்து ரூ. 609 கோடியாக உள்ளது.
இதுவே கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 534 கோடி லாபம் ஈட்டியிருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டு இருந்த ரூ. 4,832 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 5,187 கோடியாக மேம்பட்டுள்ளது.
எனினும், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், வட்டி வருவாய் கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த ரூ. 2,415 கோடியிலிருந்து குறைந்து ரூ. 2,382 கோடியாக உள்ளது. அதே வேளையில், இக்காலாண்டில், மொத்த வாராக்கடன், மார்ச் 31, 2025 நிலவரப்படி இருந்த 3.08 சதவீதத்திலிருந்து குறைந்து 2.41 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையில், நிகர வாராக்கடன்களும் 1.46 சதவீதத்திலிருந்து குறைந்து 1.04 சதவீதமாக இருந்தது. இதன் விளைவாக, சொத்து மதிப்பு இழப்பு மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள், கடந்த ஆண்டு இருந்த ரூ. 1,245 கோடியிலிருந்து குறைந்து ரூ. 1,097 கோடியாக உள்ளது.
2025-26 முழு நிதியாண்டைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டு இருந்த ரூ. 1,916 கோடியிலிருந்து 13 சதவீதம் உயர்ந்து ரூ. 2,167 கோடியாக அதிகரித்தது. மொத்த வருவாய் ரூ. 18,637 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 20,708 கோடியாக உள்ளது.
மார்ச் 31, 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் கடந்த ஆண்டு இருந்த ரூ. 65,546 கோடியிலிருந்து தற்போது ரூ. 66,328 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Summary
SBI Card on Monday reported 14 per cent rise in profit to Rs 609 crore for the fourth quarter ended March 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மஹிந்திரா ஹாலிடேஸ்: 4வது காலாண்டு லாபம் 43% சரிவு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் லாபம் ரூ. 805 கோடி!

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை



