சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பிரதமராக ராகுலையே விரும்பும் தமிழகம், கேரளம்: ஆய்வு

​நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியைக் காட்டிலும் ராகுல் காந்தியையே தமிழகம் மற்றும் கேரள மக்கள் அதிகம் விரும்புவதாக ஐஏஎன்எஸ் சி-வோட்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :3 மார்ச் 2021, 5:53 am

DIN


நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியைக் காட்டிலும் ராகுல் காந்தியையே தமிழகம் மற்றும் கேரள மக்கள் அதிகம் விரும்புவதாக ஐஏஎன்எஸ் சி-வோட்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பிரதமரை நேரடியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களிடம் வழங்கப்பட்டால் நீங்கள் நரேந்திர மோடியைத் தேர்வு செய்வீர்களா அல்லது ராகுல் காந்தியைத் தேர்வு செய்வீர்களா என்று ஆய்வில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ராகுல் காந்தியையே பிரதமராகத் தேர்வு செய்வேன் என கேரளத்தில் 57.2 சதவிகிதத்தினரும், தமிழகத்தில் 43.46 சதவிகிதத்தினரும் கூறியுள்ளனர். கேரளத்தில் 36.19 சதவிகிதத்தினர் மற்றும் தமிழகத்தில் 28.16 சதவிகிதத்தினர் மட்டுமே நரேந்திர மோடியைப் பிரதமராகத் தேர்வு செய்ய விரும்புவதாகக் கூறினர்.

பேரவைத் தேர்தல் வரவுள்ள மற்ற 3 மாநிலங்களில் நரேந்திர மோடியே ஆதிக்கம் செலுத்துகிறார். மேற்கு வங்கத்தில் 54.13 சதவிகிதத்தினரும், அசாமில் 47.8 சதவிகிதத்தினரும், புதுச்சேரியில் 45.54 சதவிகிதத்தினரும் மோடிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கேள்வி: பிரதமரை நேரடியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தால் யாரைத் தேர்வு செய்வீர்கள்?
 மாநிலங்கள்நரேந்திர மோடிராகுல் காந்திஇருவருக்குமிடையிலான வித்தியாசம்
1.தமிழகம்28.16 சதவிகிதம்43.46 சதவிகிதம்15.3 சதவிகிதம்
2.கேரளம்36.19 சதவிகிதம்57.92 சதவிகிதம்21.73 சதவிகிதம்
3.புதுச்சேரி45.54 சதவிதிதம்32.82 சதவிகிதம்12.72 சதவிகிதம்
4.மேற்கு வங்கம்54.13 சதவிகிதம்31.2 சதவிகிதம்22.93 சதவிகிதம்
5.அசாம்47.8 சதவிகிதம்23.17 சதவிகிதம்24.63 சதவிகிதம்
ஆய்வு: ஐஏஎன்எஸ் சி-வோட்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.