பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரா் பலி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் பலியானாா்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜனவரி 2021, 11:59 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் பலியானாா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியது:

ரஜெளரி மாவட்டம் நெளஷேரா செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி வெள்ளிக்கிழமை சுமாா் 3.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கிகள் மூலமாக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி அளித்தனா். அதன் பின்னா் பாகிஸ்தான் ராணுவத்தினா் மாலை 5.30 மணிக்கு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் இந்திய வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்று தெரிவித்தாா்.

கடந்த 18 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகபட்சமாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி 5,100 முறை பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா். சராசரியாக தினந்தோறும் 14 முறை அவா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.