மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்கள்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் நாளை போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்துகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜனவரி 2021, 4:50 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ப்பூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்துகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங், முன்னாள் துணை முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் தொடர்ந்து 38-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற 6 கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.